Wednesday, August 25, 2010

பென்சன் : மனித உரிமை ஆணையம் தலையீடு --பி.இசக்கிமுத்து

ஊழியர்களுக்கு வழங்கப் படும் ஓய்வுகால பலன்கள், அவர்கள் கவுரவத்துடன் வாழும் உரிமையை உத்தரவாதப்படுத் துவதாகும். இந்த ஓய்வு கால பலன்கள் காலம் கடந்து வழங் கப்பட்டால் கவுரவமாக வாழும் மனித உரிமை மீறப்பட்டதா கும். அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்து வலுப் பெறும் வகையில் தேசிய மனித உரிமை ஆணையம் இப்பிரச் சனையில் தலையிட்டுள்ளது.

மனித உரிமை பாதுகாப்புச் சட்டம்- 1993ன்படி மனித உரிமை என்பது அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட் டுள்ள சுதந்திரமாக, சமத்துவ மாக, கவுரவமாக வாழுதல் என்ப தாகும். மனித உரிமை பாதுகாவ லர்களாக தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், மனித உரிமை நீதிமன்றங்கள் உள்ளன. மேலே கண்ட மனித உரிமைகள் மீறப்பட்டாலோ, மீற காரணமாக இருந்தாலோ அல்லது மீறலுக்கு கவனக்குறைவு காரணமாக இருந்தாலோ மனித உரிமை ஆணையம் மனு பெறப்பட்டதின் பேரில் அல்லது சுயமாக தலை யிட்டு நியாயம் வழங்கும் அதி காரம் படைத்ததாகும்.

இதுவரை காவல் சித்ர வதைகள், காவல்நிலையச் சாவுகள், அரசு அதிகாரி களின் கவனக்குறைவால் ஏற்படும் பாதிப் புகள், சமூக பாதிப்புகள் தொடர்பான மனித உரிமை மீறல் களில் மனித உரிமை ஆணை யம் தலையிட்டு நீதி வழங்க உள்ளது.

ஊழியர்கள், தொழிலாளர் களுக்கு இழைக்கப்படும் அநீதி கள், ஓய்வு கால சலுகைகள் பாதுகாக்கப்படல் போன்ற ‘ளுநசஎiஉந ஆயவவநசள’ களை மனித உரிமை ஆணையம் விசாரிக்க அதி காரம் இல்லை எனக்கூறி மனுக் களை ஏற்க மறுத்த தேசிய மனித உரிமை ஆணையம் தற் போது அளித்துள்ள தீர்ப்புகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

‘கவுரவமாக வாழும் உரிமை’க்கு அடிப்படையாக ஓய்வுகால பலன்கள் அமை கின்றன. ஓய்வுகால பலன்களை காலம் கடந்து வழங்கப்பட்டால் அது கவுரவமாக வாழும் உரிமை யை பாதிக்கும். அது ஒரு மனித உரிமை மீறலாகும். அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என சில தலையீடுகளில் தீர்ப்பளித் துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாந்தவுளி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணி யாற்றி 1992ல் ஓய்வு பெற்றவர் சம்பாதேவி என்ற சம்பா ஷா. இவருக்கான பென்சனை வழங் கக் கோரி பல முறையீடுகள் செய்து பலமுறை அதிகாரிகளை சந்தித்துள்ளார். ஒன்றும் நடக்க வில்லை. அரசு அலுவலகங் களில் கடைப்பிடிக்கும் சிவப்பு நாடா கொள்கை காரணமாக ஒன்றும் நடக்கவில்லை. கடை சியாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகார் செய் தார். 07.01.2004ல் இறக்கும் வரைக்கும் அவருக்கும் பென் சன் வழங்கப்பட வில்லை. தேசிய மனித உரிமை ஆணை யம் தலையிட்ட பிறகு 11.02. 2004ல் பென்சனுக்கான உத்த ரவு பிறப்பிக்கப்பட்டு, இறந்து போன பெண்ணின் மகனுக்கு 26.10.04ல் வழங்கப்பட்டது. கவு ரவமாக வாழும் மனித உரிமை மீறப்பட்டுள்ளது எனக்கூறி உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளருக்கு ஏன் ரூ.50 ஆயி ரம் அபராதம் விதிக்கக்கூடாது என கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் அறிவிப்பு அனுப்பியது. காலதாமதத்திற்கு சுகாதாரத் துறையே பொறுப் பாகும்; தாங்கள் பொறுப்பல்ல என்று தலைமைச் செயலா ளர் கூறிய கருத்தை நிராகரித்து ஆறுவாரத்திற்குள் ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடாக இறந்துபோன பெண்ணின் மகனுக்கு வழங்க தேசிய மனித உரிமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. (வழக்கு எண் 14707/24/2003-2004 நாள் : 6.7.10)

பிறிதொரு வழக்கில் தில்லி முனிசிபல் கார்ப்பரேசனில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலை மை ஆசிரியர் உஷா கிர்தார் என் பவருக்கான ஓய்வு கால பலன் கள் வழங்கப்படாமல் காலம் கடத்தப்பட்டது. உஷா கிர்தார் எம்.சி. பெண்கள் ஆரம்பப் பள்ளி யில் ஆசிரியராக பணியாற்றி 31.02.03ல் ஓய்வுபெற்ற பெண் ஆவார். கல்வித்துறை இயக்கு நருக்கும் மாநகராட்சி கமிஷன ருக்கும் பல புகார்கள் செய் தும் பென்சன் மற்றும் சேமநலநிதி வழங்கப்படவில்லை. வேறு வழி யின்றி 01.07.2004ல் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்தார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலை யீட்டின் பேரில் 09.05.2006 அன்று அவருக்கு ரூ.6,62,774 ஓய்வுகால பலனை 28 மாதம் கழித்து வழங்கப்பட்டது. வழக் கினை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம் “ஓய்வு பெறுவதற்கு 6 மாதத்திற்கு முன் பாகவே ஓய்வுகால பலன்கள் வழங்குவதற்கான நடவடிக்கை தொடங்க வேண்டும்” கால தாமதம் ஏற்புடையதல்ல எனக் கூறி தில்லி மாநகராட்சி ஆணையரிடம் ரூ.25 ஆயிரம் ஏன் நஷ்ட ஈடு கோரக்கூடாது என விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியது. உஷா கிர்தார் முன்பு வேலை பார்த்த அலு வலகத்தி லிருந்து சர்வீஸ் ரிஜிஸ் டர் வர காலதாமத மானதால் தாங்கள் பொறுப்பல்ல எனக் கூறி நஷ்ட ஈடு வழங்குவதை கடுமையாக எதிர்த்தனர். எதிர்ப் பினை நிராகரித்து ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடாக 6 மாதத்திற்கு வழங் கிட தேசிய மனித உரிமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. (தீர்ப்பு நாள் 27.7.10)

ஓய்வுகால பயன்கள் மறுக் கப்படல் மனித உரிமை மீறல் என்ற இந்த உத்தரவு மிகவும் போற்றத்தக்கதாகும். மூத்த குடி மகன்களின் உரிமைகள் பாது காக்கப்பட்டு அவர்கள் கவுரவ மாக வாழ வழி வகை செய்கிறது.

மேலும் அரசு அதிகாரிகள் விரைவில் ஓய்வுகால பலன் களை வழங்க முன் வருவதற்கு இத்தகைய உத்தரவுகள் தூண்டு கோலாக அமையும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தேசிய மனித உரிமை ஆணை யத்தை அணுகலாம்.


No comments: