IMPORTANT ISSUES/JUDGEMENTS ON LABOUR, HUMAN RIGHTS AND SOCIAL ASPECTS CAN BE ACCESSED IN THIS BLOG-P.ESAKKIMUTHU,CITU ON "LABOUR"
Wednesday, July 28, 2010
தொழிற்சங்கம்: ரகசிய வாக்கெடுப்பு முறைக்கு சட்டம் தேவை
தொழிற்சங்கம்: ரகசிய வாக்கெடுப்பு முறைக்கு சட்டம் தேவை
-பி.இசக்கிமுத்து
கூட்டுப்பேர உரிமை என்பது தொழிலாளர்களின் பிரதான உரிமைகளில் ஒன்றாகும். இந்த உரிமை, ஐக்கிய நாடு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட உரிமை யாகும். ஐக்கிய நாடு சபையின் உறுப்பு நாடுகள் கூட்டுப்பேர உரிமைக்கான கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளன. அதனடிப்படையில் கூட்டுப்பேர உரிமை யை வழங்குவதும் அதற்காக தொழிற் சங்கங்களை அங்கீகரிப்பதும் ஒவ்வொரு ஐ.நா. உறுப்பு நாடுகளில் சட்டமாகக் கொண்டுவரப்பட வேண்டும்.
ஐக்கிய நாடு கோட்பாடு
சங்கம் அமைக்கும் உரிமை (கோட்பாடு எண் 84) மற்றும் கூட்டுப்பேர உரிமை (கோட்பாடு எண் 98) சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தால் (ஐடுடீ) உரு வாக்கப்பட்டு அனைத்து நாடுகளும் ஏற் றுக்கொண்டுள்ளன. கூட்டுப்பேர உரி மைக்கான 3.6.1981ஆம்ஆண்டு ஜெனிவா சர்வதேச சிறப்பு மாநாட்டிலும் கோட்பாடு எண் 154 ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 1998இல் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன உறுதிமொழியும் இதனை ஒரு உரிமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த உரிமையை அளித்திட, தொழிற்சங்கத் தை அங்கீகரித்திட ரகசிய வாக்கெடுப்பு தேவை என்பதை பிரிவு 29(1) கட்டாய மாக்கி உள்ளது. ஐக்கிய நாடு சபையின் உறுப்பு நாடான இந்தியாவில் இந்த சர்வ தேச கோட்பாடான கூட்டுப்பேர உரி மைக்காக தொழிற்சங்கங்களை அங்கீ கரிக்க சட்டம் இதுவரை இயற்றப்பட வில்லை.
அரசு தயாரில்லாத நிலை
அரசு ஆதரவு தொழிற்சங்கங்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகை யில் தொழிற்சங்கங்களை செக் ஆப் முறை மூலமே அங்கீகரிக்கும் நடை முறைக்கு ஆதரவு தெரிவித்து ரகசிய வாக் கெடுப்பு முறை மூலம் தொழிற்சங்கங் களை அங்கீகரித்திட சட்டம் இயற்ற இதுவரை தயாரில்லை. ரகசிய வாக்கெடுப் புக்கான சட்டம் குறித்து நாடாளுமன்றத் தில் இடதுசாரி கட்சிகள் குரல் எழுப்பும் போது, அப்படிப்பட்ட விஷயம் பரிசீலனை யில் இல்லை என்று சொல்கிறது மத்திய அரசு. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரம் கோரினால் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்கங்களை அங்கீகரித் திட சட்டம் இயற்றும் பிரச்சனை அரசின் பரிசீலனையில் இல்லை என்று தொழிலா ளர் துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
பல நாடுகளில் சர்வதேச தொழிலா ளர் அமைப்பின் கோட்பாடுகளை அங்கீ கரித்து கூட்டுப்பேர உரிமை மற்றும் தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்திட சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. கரீபியன் நாடுகளுக்கான கூட்டுப்பேர உரிமைக் கான மாதிரி சட்டம் ஐஎல்ஓ இணைய தளத்தில் உள்ளது.
சட்டம் தேவை
இந்தியாவில் பல துறைகளில், குறிப் பாக ரயில்வே, பிஎஸ்என்எல் போன்ற வற்றில் ரகசிய வாக்கெடுப்பு மூலமே கூட்டுப்பேர உரிமைக்காக தொழிற்சங் கங்களை அங்கீகரிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்கும் சட் டம் ஏற்கெனவே நடைமுறையில் உள் ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் னால் கேரளாவில் சட்டம் கொண்டுவரப் பட்டது. மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்க ளில் உள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலி யுறுத்தி வருகின்றன. இந்த உரிமை நீதி மன்றங்கள் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட தாகும். மத்திய அரசு சட்டம் இயற்றி இந்த உரிமையை வழங்கிட தயாரில்லை.
தமிழக அரசும் இதற்கு விதிவிலக் கல்ல. மே தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்து, ‘உழைப்பின் மதிப்பை’ போற்றி வருகிறோம் என்று தம்பட்டம் அடிக்கும் திமுக அரசு கூட இது குறித் தான சட்டம் இயற்ற தயாரில்லை; முன்வர வில்லை. தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் விபரம் கேட்டால், அரசின் பரிசீல னையில் உள்ளது என்ற கூறி காலம் கடத்தும் போக்கை கடைப்பிடிக்கிறது. அரசுப் போக்குவரத்துத்துறை, சிவில் சப்ளை கார்ப்பரேசன் போன்ற துறை களில் மட்டுமே ரகசிய வாக்கெடுப்பு மூலம் சங்கத்தை அங்கீகரிக்கும் முறை அமலில் உள்ளது. இதர அரசுத்துறை, தனியார் துறைகளில் செக் ஆப் முறையே நீடிக்கிறது. நீதிமன்றம் அளிக்கும் உத்தரவு சம்பந்தப்பட்ட துறையை மட்டுமே கட்டுப்படுத்தும். சட்டம் இயற்றினால் மட்டுமே அனைவரையும் கட்டுப்படுத் தும். எனவே சட்டம் இயற்றுதல் அவசியமாகும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
15 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய உச்சநீதிமன்றம், இந்திய உணவுக்கழக ஊழியர் சங்கம் தொடுத்த வழக்கில் ரகசிய வாக்கெடுப்பு முறையே சிறந்தது என தீர்ப்பளித்துள்ளது. இது பல உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு வழிகாட்டியாக அமைகிறது. மத்திய-மாநில அரசுகள் இந்த தீர்ப்பா ணையை கண்டும் காணாதது மாதிரி நடந்து கொள்கின்றது. இந்திய உணவுக் கழக வழக்கில் உச்சநீதிமன்றம் “செக் ஆப் முறை நம்பிக்கை இழந்துவிட்டது. தொழிற்சங்கத்தை அங்கீகரித்திட சரி யான முறை என்பது ரகசிய வாக்கெடுப்பு முறை” என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரகசிய வாக்கெடுப்பு முறை எவ்வாறு அமல்படுத்தப்படவேண்டும் என்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து 19 நெறிமுறைகளை உருவாக்கி உத்தர விடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படை யில் தமிழ்நாட்டில் சிவில் சப்ளை கார்ப்பரேசன் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்கம் அங்கீகாரம் செய்யப்பட வேண்டும் என்று 2008ல் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தர விட்டுள்ளது. (வழக்கு எண் றுஹ538/2000) பாரா 11ல் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
நமது ஜனநாயக அமைப்பில் தொழிற் சங்கத்தின் பிரதிநிதித்துவத் தன்மை அறிய ‘ரகசிய வாக்கெடுப்பு’ முறையே ஒரே வழியாகும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பினைத் தொடர்ந்து பல்வேறு உயர்நீதிமன்றங்கள் ரகசிய வாக்கெடுப்பு முறையே சிறந்தது எனக்கூறி தீர்ப்பளித்துள்ளனர். உதாரண மாக, குஜராத் உயர்நீதிமன்றம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் சங்க அங்கீ காரத்திற்கான தேர்தல் நடத்த 10.2.2001ல் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் றுஹ 674/09 என்ற வழக்கில் அரக்கோணம் மெட் ராஸ் ரப்பர் பேக்டரியில் ரகசிய வாக் கெடுப்பு நடத்தி சங்கத்தை அங்கீகரிக்க 8.9.09 அன்று உத்தரவிட்டுள்ளது.
போராடுவோம்
சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு முறையை உறுதி செய்திட மத்திய-மாநில அரசுகள் சட்டம்இயற்றிட நிர்ப்பந்தம் அளிக்க, கூடிய முறையில் குரல் கொடுப்பது போராடுவது வலுப் படுத்தப்படவேண்டும். குறிப்பாக தனியார் துறை, பன்னாட்டு மூலதனங்கள் நடத்தும் தொழில்களிலும் தொழிற்சங்க உரிமை, ஜனநாயக உரிமை மறுக்கப்படும் இக்கால கட்டத்தில் கூட்டுப்பேர உரிமையை உறுதி செய்யும் சட்டம் கொண்டு வரப்படுவது அவசியம்.
No comments:
Post a Comment